Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பில் தேசிய பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது மிகவும் அவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளருக்குத் தெளிவுபடுத்தினார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளாகக் காணப்படும் இவ்விடயங்கள் தொடர்பில் அரசானது இன்னும் ஆர்வமாகுவும் வேகமாவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி நிவாரணங்கள் - தீர்வுகளை வழங்குவதிலிருந்து அரசு விலகி நிற்க முடியாது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு இறுதி செய்யப்பட வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com