Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் நடைப்பெறும் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.வருகிற 16ம் திகதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், 14ம் திகதி மாலை முதல் 16ம் திகதி மாலை வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும், இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் 19ம் திகதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை டாஸ்மாக் நிர்வாகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

0 Responses to தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com