நாட்டை புதிதாக மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசியல் சக்தியொன்று அவசியமாகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணைந்த இந்த அரசாங்கத்தால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எமது நாட்டின் பிரச்சினைகளை அதிகரித்தது போன்று தற்போதைய ரணில், மைத்திரி அரசும் அவர்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கு புதிய அரசியல் சக்தியொன்று தேவை. அதனை ஏற்படுத்துவதற்கு, இந்த நாட்டு மக்களை ஒன்று சேர்ப்பதற்கான மேதின திட்டமொன்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய அரசியல் சக்தி வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க