சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிலும், கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகுவின் அதிரடிகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது அறிவாலயம்.
தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள்.
கூட்டத்தில் பேசிய மீனா லோகு, " வேட்பாளராக கட்சி என்னை அறிவித்ததும் மாவட்ட செயலாளர் வீரகோபாலைப் போய்ப் பார்த்தேன். அவர் எடுத்த எடுப்பிலேயே, 'மாவட்ட செயலாளர் தேர்தல்ல எனக்கு எதிராக நீங்க நின்னீங்க. ஒன்றரை கோடி கொடுத்துத்தான் ஜெயிக்க முடிஞ்சது'ன்னு அதிருப்தியாக பேசினார்.
தேர்தலில் எனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் அவர் விரும்பவில்லை. நான் தன்னந்தனியாகத்தான் பிரசாரம் செய்தேன். நான்கு வார்டுகளில் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. வேண்டுமென்றே என்னைப் புறக்கணித்தார்கள்.
போகும் இடங்களில் எல்லாம் குடிப்பதற்குப் பணம் கேட்டால் எங்கே போவது? ஏழாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்காமல் போவதற்கு இவர்கள்தான் காரணம். இதுவே, அ.தி.மு.க.வில் மலரவன், கே.பி.ராஜு, மேயர் ராஜ்குமார் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கும்பலாக ஓட்டுக் கேட்கப் போனார்கள். எனக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஒருவரும் இல்லை" எனக் கொந்தளித்தார்.
முன்னதாக, கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்திக்க சென்றிருக்கிறார் மீனா லோகு. அங்கு இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், 'தேர்தல் முடிவு வெளியாகும்போது பல ரவுண்டுகளில் நீங்கள்தான் முதலிடத்தில் இருந்தீர்கள். நீங்கள் தோற்பீர்கள் என நினைக்கவில்லை.
தலைவரிடம் பேசும்போது அழுதுவிட வேண்டாம்' எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். உள்ளே கலைஞரைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார் மீனா லோகு. அவர் அழுததைப் பார்த்து கருணாநிதியும் அழுதுவிட்டார்.

0 Responses to கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! அதிர வைத்த பெண்