மாகாண சபையின் அனுமதியின்றி மாகாண நிர்வாக அதிகாரங்களில் தன்னிச்சையான நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னெடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “யாழ். நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலைக் கூட தன்னுடைய எண்ணப்படியே ஆளுநர் நடத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து நாம் அவருக்குத் தெரியப்படுத்தியபோது கலந்துரையாடலில் பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் கொழும்பிலிருந்து வருகின்றனர் எனக் கூறினார்.
எமக்கு உதவியாகவே அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் கூறினார். எமக்கு உதவுவதாகக் கூறி உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எம் ஊடாகவே பேச முன்வர வேண்டும் ஆளுநர் ஊடாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை எம்மவர்களாகவே இப்போதும் நாம் கருதுகிறோம்.
யாழ். நகர அபிவிருத்தித் திட்டம் குறித்து வடக்கு மாகாண சபை சம்பந்தப்பட்ட அனைவருடனும் கடந்த வருடத்தில் இருந்து பேசி வருகிறது. அவற்றின் பெறுபேறுகளை எம்மைக் கேட்டறியாது ஆளுநர் கூட்டம் ஒன்றை நடத்துகிறார். இவ்வாறான கூட்டத்தை நடத்தாது முதலில் எம்மைக் கேட்டு விடயங்களை அவர் அறிவதே சிறந்தது.
இது தொடர்பில் நான் அவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன். இதுபற்றி என்னிடம் அவர் பேசியபோது எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் கொழும்பிலிருந்து வருகின்றனர் எனக் கூறினார். அப்படியானால் அவர்களுடன் கூட்டத்தை நடத்தி கருத்துக்களை எமக்குத் தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தன்னிச்சையாக செயற்படுகின்றார்: விக்னேஸ்வரன்