Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் இறைமையும், அதிகாரமும் பகிரப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் யாழ்ப்பாணம் மருதனாமடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பிரதேசத்திற்கு ஒரு விசேடமான அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அரசாங்கம் சிந்திப்பதாகவும், அதற்கு சர்வதேச சமூகம் உதவ முன்வந்திருப்பதாகவும் அறிகின்றோம். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக இவ்வருடம் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.

இந்த நாட்டில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, ஆட்சியதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால் இன்று பல குறைகள் இல்லாமல் போயிருக்கும். இறைமை என்பது மூன்று விடயங்களை உள்ளடக்குகின்றது. முதலாவது, ஆட்சியதிகாரம். இரண்டாவது தேர்தல் – ஜனநாயகம், மூன்றாவது மனித உரிமைகள்.

இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், எமது கைகளில் சட்டத்தை ஆக்கும் அதிகாரம், நிர்வாக அதிகாரம் இருந்தால், எமது வாக்குரிமையை பயன்படுத்தி நாங்கள் விரும்பிய ஆட்சியாளர்கள் ஊடாக அந்த கருமங்களை நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்திருப்போம். அவ்வாறு இருந்திருந்தால் பல குறைகள் நேர்ந்திருக்காது.” என்றுள்ளார்.

0 Responses to எமது இறைமையும், அதிகாரமும் பகிரப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com