“இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்குரித்தான, பிறப்புரிமையான இறைமையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையில் சமஸ்டித் தத்துவம் மற்றும் கோட்பாட்டின் படி அரசியல் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனத் திடசங்கற்பத்துடன் வற்புறுத்துகின்றோம்.“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததனால் நடைபெற்ற வந்த போராட்டங்களினால் இந்த நாடு குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்துவிட்டது. அதன் விளைவுகள் தொடர்கின்றன.
குறிப்பாக சர்வதேச, இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 2012, 2013, 2014, 2015களில் தீர்மானங்கள் என்பன இலங்கையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் ஒரு தீர்வை காண்பதற்குத் சர்வதேச சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
இலங்கையின் 2015இன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அரசு ஐ.நா. சாசனப்படியான மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தை சர்வதேசத்துடன் இணைந்து உருவாக்கியதினாலும் அதனை நிறைவேற்றக் கடப்பாடும் கொண்டிருப்பதால் இக்கால சந்தர்ப்பத்தில் சர்வதேச இராஜதந்திர அனுசரணையை கருத்திற்கொண்டு இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்ட வேண்டும்.
அத்துடன், வடக்குக் கிழக்கில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுக்கும் அப்பிரதேசமே தாயகமாகும் என்பதை ஏற்றுக் கொண்டு அம் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அம்மக்களின், முஸ்லிம் மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள பிரதிநிதிகளுடன் ஏற்படும் இணக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றையும் அங்கீகரிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சியே தீர்வாக முடியும்: கூட்டமைப்பு