வடக்கிலிருந்து சமஷ்டிக் கோரிக்கை ஏன் எழுந்தது?, என்பது தொடர்பில் அனைவரும் ஆராய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “1956களிலும், 1960களிலும் வடக்கிலிருந்து சமஷ்டி வேண்டுமென்ற குரல் ஒலித்தது. அதேபோன்று 26 வருடகாலம் நாட்டில் பயங்கர யுத்தமும் நிலவியது. எனவே சமஷ்டி தேவை என்ற குரல் ஏன் வடக்கிலிருந்து ஒலித்தது. அதேபோன்று ஏன் 26 வருடகால யுத்தம் நாட்டில் ஏற்பட்டது? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும்.
அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்காக நாம் இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.” என்றுள்ளார்.

0 Responses to சமஷ்டிக் கோரிக்கை எழுந்த காரணத்தினை ஆராய வேண்டும்: ஜனாதிபதி