Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை ஒழித்து, ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கூறியுள்ளதாவது, “நாட்டின் முன்னோக்கிய பயணம் குறித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அந்தந்த கட்சிகளின் கொள்ளை மற்றும் கோட்பாடுகளை அடியொற்றி செயற்படுவதோடு, நாட்டின் பொதுப் பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு இவற்றின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள். அதற்கான பிரதிபலன்களை அனுபவிக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து பாராளுமன்றத்தை ஒரு அரசாங்கமாக மாற்ற எழுந்த சவால்களுக்கு எளிதான முறையில் முகம் கொடுத்தோம். அதன்மூலம், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடிந்தது.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்களின் ஊழல் ஆட்சியை ஒழித்து முன்னோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com