ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிறைக்குள் இருப்பதாகவும், தன்னுடைய அடையாளத்தை இழந்து சிதைந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் (மஹிந்த ஆதரவு அணி) மே தினக் கூட்டம் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு பிரதான உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘யுத்தத்தினால் எமது நாடு பிளவுபட்டிருந்தது. எனினும், அதனை நாம் இல்லாமலாக்கி சமாதானத்தை ஏற்படுத்தினோம். யுத்தத்தின்போது, விரட்டப்பட்ட முஸ்லிம்கள், இடம்பெயர்ந்த மக்கள் என அனைவரையும் நாம் மீள்குடியேற்றினோம்.
எனக்கு யுத்தத்தை வெற்றி கொள்ளவும், சமாதானத்தை ஏற்படுத்தவும், நாட்டில் அபிவிருத்திகளை செய்யவும் 12 பில்லியன்கள் செலவாகியது. இவ்வாறெல்லாம் செய்த பிறகு இன்று நிலைமை மாறியுள்ளது. இந்த சமாதானமான சூழ்நிலையை மாற்றி மீண்டும் நாட்டை பிளவுபடுத்த இடமளிப்பதா என்பது தொடர்பில் மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
தற்போதைய அரசு முற்றாக மாற்றமான முறையிலேயே செயற்பட்டுக்கொண்டுள்ளது. எனினும் நாம் அதற்கு இடமளிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக, எமது நாட்டு மக்களுக்காக இந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாம் அனைவரும் போராடுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சி; ஐக்கிய தேசியக் கட்சியின் சிறைக்குள் இருக்கின்றது: மஹிந்த