வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இம்மாதம் 12, 13 மற்றும் 17ஆம் ஆகிய தினங்களிலேயே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை கிடைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஏனைய நால்வரில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் அந்த மாகாண சபையின் செயலாளர் எஸ்.பத்மநாதன் ஆகியோரும் அடங்குவர்.
வடக்கு மாகாண சபையில் சமஷ்டி யோசனையை முன்வைத்து நாட்டை பிரிப்பதற்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொண்டதன் பின்னரே உயர்நீதிமன்றம் மேற்கண்ட அழைப்பாணையை விடுத்துள்ளது.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வருக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!