Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருக்கும் கைதுகளுக்கான காரணங்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அச்சமின்றி நாட்டின் சகல பகுதிகளுக்கும் சென்றுவரக் கூடிய நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யவதற்கான சூழல் இருக்கின்றதா?, என்பதை அரசாங்கம் கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நுண் நிதியளிப்புச் சட்டமூலம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

மன்னாரில் சிவகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைவிட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகரித்திருக்கும் இராணுவக் கெடிபிடிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் தொடரும் கைதுகளுக்கான காரணத்தினை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com