ஐந்து ஆண்டுகளுக்குள் இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்களின் போது, ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக தூபி அமைக்கப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை எழுப்புவது தொடர்பில், தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு பதவி பறிபோனாலும், அதுகுறித்து தான் கவலைப்படப்போவதில்லை என்றும், உயிரிழந்தவர்கள் நினைவாக அங்கு சென்று தீபங்களை ஏற்றுவதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி: விஜயகலா மகேஸ்வரன்