பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சாட்சியை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் அநுர சேனநாயக்க கைது செய்யப்பட்டார்.

0 Responses to வசீம் தாஜுதீன் கொலை வழக்கு; அநுர சேனநாயக்கவுக்கு விளக்கமறியல்!