பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, சபை அமர்வுகளை நாளை புதன்கிழமை வரை சபாநாயகர் கரு ஜெயசூரியா ஒத்திவைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில், முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா இன்றைய அமர்வின் போது கருத்து வெளியிட்ட போது, சபையில் கூச்சல் குழப்பம் மற்றும் அடிதடி ஏற்பட்டது.
இந்த குழப்ப நிலை அடிதடிக்குள் சிக்கி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை நாளை வரை ஒத்திவைப்பதாகவும், இன்றைய சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாராளுமன்றத்தில் குழப்பம்: ஒருவர் காயம்; நாளை வரை சபை அமர்வுகள் ஒத்திவைப்பு!