Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரபுக்களுக்கான பாதுகாப்பை இராணுவம் வழங்குவது சட்டவிரோத செயல் என்றும், கடந்த வருடத்தின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com