Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் தற்போது காணப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடன் ஜப்பானின் நகோயா நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தாய் நாட்டின் மீது கரிசனை செலுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பு வழங்குமாறு ஜப்பானில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் சரிவர நிறைவேற்றப்படாமையால், தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

G-7 மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களால் தனக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை மூலம் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மீது சர்வதேசம் கெண்டுள்ள நம்பிக்கை உறுதியாவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com