திமுக-அதிமுகவுக்கு மாற்று பாமகதான் என்பது தெளிவாகி உள்ளது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றிக் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் டாக்டர்.அன்புமணி ராமதாஸ். அப்போது கடந்த 15 மாதங்களாக கடுமையாக உழைத்து, அனைத்துத் தொகுதிகளில் உள்ள உங்களுக்குத் தேவையானது இந்த நலத் திட்டங்கள்தான் என்று அறிவித்தோம். இருப்பினும் மக்கள் எங்களுக்குத் தேவையானது ஓட்டுக்குப் பணம்தான் என்று பணம்
பெற்றுக்கொண்டு வாக்களித்துள்ளனர்.
மக்களிடம் பட்ஜெட் பணத்தை அப்படியே பிரித்துக் கொடுத்துவிட்டால் திருப்தி ஆவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பணப் பட்டுவாடா செய்துதான் திமுக, அதிமுக வெற்றிப்பெற்றது என்றும், தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய அன்புமணி, திமுக-அதிமுகவுக்கு மாற்று பாமக என்பது தெளிவாகி உள்ளது என்று மட்டும்தான் கூறினார், ஆனால் அது எந்த
வகையில் என்று விளக்கிக் கூறவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அதிமுக - திமுகவுக்கு மாற்று பாமகதான் என்பது தெளிவாகி உள்ளது: அன்புமணி ராமதாஸ்