கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீர் முப்படைகளின் முகாம்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பூரில் பாடசாலை நிகழ்வொன்றில் பங்கேற்றபோது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் தகாத வார்த்தைகளினால் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனாலேயே, முப்படைகளின் முகாம்களுக்கு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் முப்படையினர் எதிர்காலத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to முப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை!