Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா ஜெயராம், ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

“தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடும் போதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆறாவது தடவையாகவும் தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றமையால் தமிழக மக்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் பட்டாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.

ஜெயலலிதா தேர்தல் பிரசாரங்களின்போது இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்கள் சார்பாகவும் பல அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார். இதன்மூலம் அவர் மீதான எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகியுள்ளன. ” என்றுள்ளார்.

0 Responses to ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்தும் வழங்க வேண்டும்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com