Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் கலாபவன் அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லை, மாறாக மெத்தனால் அல்கஹால் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

நடிகர் கலாபவன் மணி கேரளவில் மிகவும்புகழ்ப்பெற்ற நடிகர். தமிழகம்,ஆந்திரா என்று அவர் பரவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலபாவன் மணி காலமானார். இவர் உடல் நலக் குறைப்வால் காலமானார் என்று கூறப்பட்ட நிலையில், இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கலாபவன் மணியின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார்.பின்னர் வழக்கு சூடுப்பிடிக்கத் தொடங்கவே, இவர் அருந்திய மதுவில் பூச்சிக் கொல்லி மருந்தை யாரோ கலந்துக் கொடுத்துள்ளார்கள் என்கிற விவரம் தெரிய வந்தது.

இருப்பினும் கேரள மருத்துவர்கள் தடவியல் சோதனை நடத்த ஹைதராபாத் தடவியல் நிலையத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில் கலாபவன் மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லை என்றும், பதிலாக மெத்தனால் ஆல்கஹால் அதிகம் இருந்தது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

0 Responses to கலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: மருத்துவ அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com