Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது இப்போதைய கூட்டணி தொடரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று ஒரு அமைப்பைத் தொடங்கின். பின்னர் இதில் தேமுதிக இணைந்துக்கொள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி என்று உறுதியானது.பின்னர் தமிழ் மாநில கனகிராஸ் கட்சியும் சேர்ந்துக்கொள்ள தேமுதிக-தமாக-மக்கள் நலக் கூட்டணி என்று இவர்களது பெயர் இறுதி செய்யப்பட்டது.

இக்கூட்டணி படுத் தோல்வியை சந்தித்த போதிலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இணைந்து போட்டியிடுமா, அல்லது பிரிந்து சென்று போட்டியிடுவார்களா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலை இதே கூட்டணியில் சந்திக்க தமது கட்சி உறுதியுடன் இருப்பதாகவும், காரணம் எங்களது கொள்கை என்பது மதுவை ஒழித்தல், ஊழலை ஒழித்தல் என்று ஒன்று பட்டு நிற்பதால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும் என்று திருமா கூறியுள்ளார்.

0 Responses to உள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com