கசப்பான சில உண்மைகள்…
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்த தலைவர்கள் தமக்குக் கிடைத்த வாக்குகள் சென்றதடவையை விட இந்தத் தடவை அதிகரித்துள்ளன என்று வழமையான அறிக்கைகளை விடத் தொடங்கிவிட்டார்கள்.
தொடர்ந்து போராடுவோம் என்று வை.கோ, விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கூறியதாக இன்றைய காலைச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தோற்றாலும் அ.தி.மு.கவைவிட ஒரு வீதம்தான் குறைவான வாக்குகளை எடுத்திருக்கிறோம், சுமார் நான்கு இலட்சம் வாக்குகள் குறைவு, அதேவேளை உறுதியான எதிர்க்கட்சியாக வென்றுள்ளோம் என்று மு.கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தோல்விக்குப் பிறகு மு.கருணநிதி வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தையும் படித்தால் எல்லாக்காலத்திலும் அவர் வாக்குகளில் முன்னேறியிருப்பதாக தெரிவித்திருப்பதைக் காணலாம்..
இப்போது நாம் தமிழர் கட்சி 1.1 வீத வாக்குகளை பிடித்துவிட்டது, வை.கோவை முந்திவிட்டது, கம்யூனிஸ்டுக்களை முந்திவிட்டது என்று கூறப்படும் நியாயங்கள் மு.கருணாநிதி தொண்டர்களுக்கு விடும் ஒரு வீத வாக்கு நியாயங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது ஒரு கேள்வி..
தேர்தலுக்காக விஜயகாந்துடன் கூட்டணி அமைத்த வை.கோ அந்தச் சூடாற முன் தான் போட்டியிட இருந்த தொகுதியில் இருந்து போட்டியிடமாட்டேன் என்று கோழைத்தனமாக ஓடியபோதே விஜயகாந்தின் முதல் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது.
அந்தக் கணமே வை.கோவை விரட்டியடித்திருந்தால் விஜயகாந்த் முதல் கோணலை சரி செய்திருக்கலாம்.
இது கசப்பாக இருந்தாலும் உண்மை இதுதான்.. வை.கோ ஜெயலலிதாவின் ஆள் என்று விஜயகாந்த் கட்சியில் இருந்தே பலர் வெளியேறியது தெரிந்ததே.
முதலில் சாதிக்கலவர அபாயத்தால் பின் வாங்குகிறேன் என்றும் பின் பணமில்லை என்றும், தனக்கு 77 வயதாகிவிட்டது இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் வை.கோ மூன்று நியாயங்கள் கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியின் வீழ்ச்சிக்கு கோபாலசாமியின் நம்பிக்கையீனமான பேச்சுக்களே முதல் காரணம், அடுத்த காரணம் விஜயகாந்த் பேசிய வெத்துவேட்டு பேச்சுக்கள் என்று தமிழக ஊடகங்களே இன்று காலை ஒப்புக்கொண்டுள்ளன.
விஜயகாந்த் உடல், மூளை அளவில் பெரும் பாதிப்படைந்து, என்ன பேசுகிறோம் எதற்காக பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசி, ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் அவர் தனக்கான வாக்கு வங்கியை படபடவென வீழ்த்திச் தனது அணியை தானே தோற்கடித்து சென்றார்.
முன்னவர் பேசத் தெரிந்து கெடுத்தார் என்றால் மற்றவர் பேச முடியாமல் கெடுத்தார் என்பதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு நடந்தது.. வை.கோவும் விஜயகாந்தும் எதிரிகளுக்கு கோல் போடவில்லை தமக்குத்தாமே கோல் போட்டு தம்மைத்தாமே தோற்கடித்திருக்கிறார்கள்.
ஊடகங்களில் வடிவேலைவிட பெரும் காமடியனாக விஜயகாந்துடைய தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்றிருந்தன, விஜயகாந்த் முதல்வராக வரவேண்டியதில்லை சாதாரண எம்.எல்.ஏ ஆகக்கூட தகுதியற்ற வெத்துவேட்டு என்பதை மக்கள் கண்டு பிடிக்க அவரது பேச்சுக்களே காரணம்.
அதைவிட துயரம் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யக்கூட தான் தகுதியற்றவர் என்பதை வை.கோ வாக்காளருக்கு எடுத்துரைத்த நிகழ்வுதான்.
சீமானுடைய கட்சி ஓர் இடத்தைத் தவிர மற்றய இடங்களில் கட்டுப்பணத்தையே எடுக்க முடியாது என்பதை புலம் பெயர் தமிழரில் பலர் அறியாதிருந்தது இன்றுவரை ஆச்சரியம்தான், பலர் சீமான் முதல்வராவார் என்று கூறியதையும் ஆங்காங்கு கேட்க முடிந்தது..
இப்போது அந்தக்கணிப்புக்களுக்கு உண்மை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை தேர்தல் புரிய வைத்துள்ளது.
ஒருவர் தமிழக மாநில அரசில் முதல்வராக வருவதன் மூலம் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது.. தமிழீழ பிரேரணை இயற்றிய ஜெயலலிதா கம்பி எண்ணியது ஏன் வெறும் ஊழல் மட்டுமா.. அதைவிட வேறு ஏதோ இருக்க வேண்டும் அது என்ன.. தமிழீழ பிரேரணையாக அது ஏன் இருக்கக்கூடாது.. இதுவரை யாரும் சிந்திக்கவில்லை..
இந்திய தலைமைக் கொள்கைக்கு மாறாக நடந்தால் ஏதோ ஒரு குற்றச்சாட்டு வரும், அது கம்பி எண்ண வேண்டிய சூழலை ஏற்படுத்தும், மற்றப்படி தமிழக மாநில முதல்வர் பதவிக்கு அதிகாரம் எதுவும் கிடையாது.
போர்க்குற்ற விசாரணை வேண்டும், தமிழீழம் வேண்டும் என்று பிரேரணை இயற்றிய ஜெயலலிதா சிறையில் போட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் அதை யாரும் பார்க்கவில்லை.
மேலும் தமிழக அரசியலில் நாம் தலையிடக்கூடாது என்று வரிக்கு வரி பிரபாகரன் சொல்லியிருந்தார், அவருடைய படத்தை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா என்பதை ஒன்றுக்கு பல தடவைகள் சீமான் யோசித்திருக்க வேண்டும்.
வெறும் நான்கு லட்சம் பேரா பிரபாகரனை தமிழகத்தில் ஆதரித்தார்கள்.. சிந்திக்க வேண்டிய இடத்தை இந்தத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் பணம் பெரிய விளையாட்டை விளையாடிவிட்டது என்று தோற்றவர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள், தமிழகத்தில் எதற்கு பணம் இல்லை..
பணம் இல்லை என்றால் படுகொலை கூட அங்கு செய்தியாகாது, பத்திரிகையில் எழுதுவதில் இருந்து, வைத்தியசாலையில் அனுமதிப்பதில் இருந்து எல்லாமே பணம்தான், ஒரு மனிதனின் மாத வருமானத்தை ஊர்ஜிதம் செய்யும் ஏற்பாடுகள் பூரணமாக இல்லாத நாட்டில் ஒவ்வொரு நகர்வும் பணத்தால் மட்டுமே நகரும்.
புரியாணி சோறும், நூறு ரூபாவும் கிடைத்தால் லாரியில் ஏறி தேர்தல் கூட்டத்திற்கு போகும் நிலையில்தான் தமிழினத்தின் தலைவிதி இருக்கிறது, இதை மாற்றி தமிழருக்கு ஒரு தன்மானத்தை உருவாக்க திராவிடக்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.
வேஷ்டி, சட்டை, தங்கமூக்குத்தி, தொலைக்காட்சி, பொங்கலுக்கு புடவை என்று தமிழ் மக்களை மானமற்ற பிச்சைக்காரராக ஆக்குவது எதிர்கால தமிழகத்தை பணத்தால் வாங்கும் முயற்சிக்கான வியூகமே..
சாரி சாரியாக ஜெயலலிதாவின் காலில் விழும் தமிழர்களை பார்த்தால் இவர்கள் காலில் விழும் கூட்டமல்ல அவருடைய காசில் விழும் கூட்டம் என்பதை அவரே உணர்ந்திருப்பார்.
தமிழர்களின் பொருளாதாரம் அவர்களுக்கு தன்மான வாழ்வை தரும்படியாக அமையவில்லை தமிழகத்தில் சரியான சமூக நல வாழ்வியல் கடந்த ஐம்பது வருடங்களில் கட்டியமைக்கப்படவில்லை.
இது மாற்ற முடியாத பேரவலம்.. இதை மாற்ற முடியாது..
புலம் பெயர் தமிழர்கள் மிகவும் சிறிய இனம்.. தமிழக அரசியலில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.. அதுபோலவே தமிழக அரசியலாலும் புலம் பெயர் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
ஈழத் தமிழினத்திற்கு விடிவு தர தமிழகம் உதவும் என்ற எல்லையின் உச்சம் எம்.ஜி.ஆர் காலத்துடன் முடிந்துவிட்டது.
இலங்கை தமிழர்கள் சிக்குண்டு கிடந்த பொறிக்கிடங்கைவிட தமிழக தமிழர்கள் சிக்குண்டு கிடக்கும் பொறிக்கிடங்கு மிகவும் பெரியது ஆபத்தானது என்பதை புலம் பெயர் தமிழர் இன்னமும் கண்டறியாதிருப்பது பெரும் சோகமே.
அதைவிட சோகம் தமிழக தமிழர்களே அதைக் கண்டறியாதிருபதும், கண்டும் வேறு வழியற்று காணாதது போல் நடப்பதுமாகும்.
சங்ககாலத்திற்குப் பிறகு அன்னியர் கையில் விழுந்த தமிழகம் கலை, கலாச்சாரம், சடங்கு, பொருளாதாரம், உற்பத்தி, விற்பனை என்று அனைத்துத் தளங்களிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மூழ்கி மூழ்கி சுயத்தை இழந்து, மீட்க முடியாத இடத்திற்கு போய்விட்டது.
எப்படி சிறீலங்காவில் ஐ.தே.க – சிறீலங்கா சுதந்திரக்கட்சியைவிட வெறொரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதலில் இரு பேரினவாதக் கட்சிகளும் கூட்டாக குறியாக இருக்கின்றனவோ அதே நிலைதான் தமிழகத்தில் திமுக – அதிமுக மறைமுக திராவிட உறவில் இருக்கிறது.
சென்னை மழை வந்து வடிகாலற்ற மொகஞ்சதாரோ காலத்தில் தமிழினம் வாழ்வதை உலகிற்கு சொல்லிச் சென்ற பின்பும்.. தமிழகத்திடம் விடிவைத் தேடலாமா என்பது புலம் பெயர் தமிழினம் முன்பாக உள்ள முக்கிய கேள்வி..
அன்றொரு நாள் ஏ தாழ்ந்த தமிழகமே என்றபடி அரசியலுக்கு வந்து ஆரிய ஆட்சியை வீழ்த்தி, திராவிட ஆட்சிக்கு வழி சமைத்தார் அண்ணா, இப்போது திராவிட ஆட்சியிடமிருந்து தமிழகத்தை மீட்கமுடியாது தவிக்கிறார்கள் சீமானும், அன்புமணி ராமதாசும்.
தமிழக அரசியலா.. தேசத்தின் குரல் என்று பாராட்டப்பட்ட அன்ரன் பாலசிங்கம் பதில் கூறாமல் சிரித்தது இன்றும் நினைவில் கிடக்கிறது..
தமிழக அரசியலுக்கு அவருடைய மதிப்பீட்டைவிட புதியதோர் மதிப்பீடு இன்றும் தேவையற்றதாகவே இருக்கிறது.
அலைகள் தமிழக தேர்தல் குறித்த பார்வை.. 20.05.2016

0 Responses to தமிழக தேர்தலும் புலம் பெயர் தமிழருக்கான படிப்பினைகளும்….