தற்போதையக் காலக் கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுவைச் சிகிச்சை தேவை என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே வெற்றிப்பெற்றது. என்றாலும், அசாம்,கேரளாவில் ஆட்சியைப் பறிக்கொடுத்து உள்ளது. எனவே,கட்சியை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்க வேண்டும் என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், ராகுல் காந்தி சுயமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், அவர் கட்சியின் வழிக்காட்டுதல்கள் படியே முடிவெடுக்கிறார் என்றும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், தாம் ராகுல் குறித்தோ சோனியா காந்தி குறித்தோ தவறாகப் பேசவில்லை என்றும், சொல்லப்போனால் கட்சியை அறுவைச் சிகிச்சை செய்யும் சிறப்பு வாய்ந்த வல்லுனர்கள் இவர்கள் இருவரும்தான் என்றும் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

0 Responses to காங்கிரஸ் கட்சிக்கு அறுவைச் சிகிச்சை தேவை: திக் விஜய் சிங்