Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றி கொள்ள இந்த மே தினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "இன்றைய தினம் சமூக மேம்பாட்டுக்காக வியர்வை சிந்தி, ஊழியத்தை அர்ப்பணித்து தமது பங்களிப்பை வழங்குகின்ற வேலை செய்யும் மக்களின் தினமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தினர் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆற்றும் பணிக்கு நன்றியைத் தெரிவிக்கின்ற - அவர்களது ஊழியப் பங்களிப்பை மதிப்பீட்டுக்கு உட்படுத்துகின்ற - அதற்கு உரிய பெறுமானத்தை வழங்குகின்ற - அவர்களது நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற - அதற்கான ஒழுங்குமுறையான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின்ற ஒரு நாளாக மே தினத்தை மாற்றிக்கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

தொழிலாளர் வர்க்கத்தினருக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்கள், தமது அரசியல் தேவைகளை விட வேலைசெய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது தொழிலாளர் வர்க்கத்தினதும், நாட்டினதும் நலனுக்குக் காரணமாக அமையும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பது அரசினது அபிலாஷையாகக் காணப்படுகிறது." என்றுள்ளார்.

0 Responses to வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ளும் உத்வேகத்தை மே தினம் வழங்கட்டும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com