Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல்; இலங்கையிலுள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சர்வதேச தொழிலாளர் தினமானது தொழிலாளர்களினது கௌரவத்தையும் அவர்களது சாதனைகளையும் கொண்டாடும் தினமாக மட்டுமல்லாது, தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் நினைவுகூரும் ஒரு தினமாகும்.

மே தினத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் அயராது உழைக்கும் நமது நாட்டின் தொழிலாளர் சமூகத்திற்கு எனது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த முக்கியமான நாளில், நாட்டை அபிவிருத்தி செய்யும் தங்களது பணிகளிலே ஒற்றுமையோடு செயற்படுமாறு அழைப்பு விடுப்பதோடு சமூகங்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்தவர்களாக பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இத்தருணத்தில் தொழிலாளர் சமூகத்தின் கௌரவத்தையும், சுய மரியாதையையும் பாதுகாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு அவர்களது நல்வாழ்வை உறுதிசெய்ய தேவையான கருமங்களையும் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறேன்.

இறுதியாக தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல்; இலங்கையிலுள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மிக தாழ்மையாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்றுள்ளது.

0 Responses to குறுகிய அரசியல் நோக்கங்களைக் கடந்து தொழிலாளர்களுக்காக உழைப்போம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com