Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவம் உள்ளிட்ட முப்படைகளிடமும் உள்ள பொதுமக்களின் காணிகள் 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையாக விடுவிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளில் மேலும் ஒரு தொகுதியாக 201.3 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதாவது, "இராணுவத்தினர் வசமிருந்த 29,000 ஏக்கர் காணிகள் படிப்படியாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது அது 3000 ஏக்கர் காணியாகக் குறைந்துள்ளது. இந்தக் காணிகளில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்திற்குத் தேவையான காணிகளைத் தவிர மிகுதி காணிகளை படிப்படியாக மாதாந்த அடிப்படையில் அல்லது நாளாந்த அடிப்படையில் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கையானது ஒரு தொடர் நடவடிக்கையாகும் அது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.” என்றுள்ளார்.

எனினும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மாத்திரம் 5,000 ஏக்கர் வரையில் பொதுமக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசம் இருப்பதாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்டு வரும் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் 2018க்குள் முழுமையாக விடுவிக்கப்படும்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com