Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துருக்கி இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 10.00 மணியளவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர்.

விமான நிலையத்துக்கு காரில் வந்த தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பின்னர் விமான நிலையத்தில் 3 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தாக்குதலையடுத்து தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய நகராமான இஸ்தான்புல்லில் இருந்து விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லில் மட்டும் இந்த ஆண்டு 4 மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0 Responses to துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com