Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொறியாளர் வினோதினி மீது அமில வீச்சு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

கடந்த 2012ம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த வினோதினி தீபாவளிக்கு சென்னையிலிருந்து காரைக்கால் சென்றிருந்தார். தீபாவளி முடிந்து நவம்பர் மாதம் 14ம் திகதி சென்னைக்கு வர அவர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்தபோது, ரமேஷ் என்பவர் வினோதினி மீது அமிலத்தை வீசினார். துடித்துடித்த வினோதினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் திகதி உயிரிழந்தார். இந்த சமபவத்துக்குக் காரணமான சுரேஷ் அப்போதே கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆனால்,சுரேஷ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்த நிலையில், சென்னை உயர நீதிமன்றமும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. என்றாலும், நீதிபதிகள் விசாரணை நீதிமன்றம் இப்படிப்பட்ட அரிதினும் அரிதான வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

அதோடு, வினோதினி தரப்போ, புதுவை அரசோ இதுக்குறித்து மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் இதுக்குறித்து தங்கள் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு குற்றவாளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, வினோதினி தரப்புக்கு புதுவை அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். அப்போது சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்தும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், இத்தகைய வழக்குகளில் விசாரணை சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்றும், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனைக் கொளுத்துவோம் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

0 Responses to பொறியாளர் வினோதினி மீது அமில வீச்சு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நீதிபதிகள் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com