Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த பகுதிகளைத் தெரிவு செய்து, அங்கு கொங்கிரீட் நிலக்கீழ் குழிகளை அமைத்து அவற்றுக்குள் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பில் ஆராய்வதற்கு முப்படையினரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதுடன், இக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பிரதிப் பொலிஸ்மா அதிபரும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலாவ இராணுவ முகாமில் சாதாரண களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களிலேயே ஆரம்பத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு தலைமையகத்தை அமைப்பதில் கூடுதல் செலவு ஏற்பட்டதால் களஞ்சியங்களை அமைப்பதற்கு அக்காலத்தில் பணம் இருக்கவில்லை என்று இராணுவத்தினரால் கூறப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

எனினும், எதிர்காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களைத் தெரிவுசெய்து அங்கு கொங்கிரீட் நிலக்கீழ் குழிகளை அமைத்து அவற்றில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதுடன், மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

கொஸ்கம- சலாவ முகாமில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளிலேயே இனி ஆயுதக் களஞ்சியங்கள்; ரணில் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com