Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரச தரப்பு அதிகாரிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போர் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அதிகளவான கைதுகள் இடம்பெற்றதாக பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அரசு வெளியிடவில்லை. எனினும் சுமார் 120 தொடக்கம் 162 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை 11 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை இரத்து செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com