Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளமைக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் இருந்து ஆர்பிகே 500 ஏ கியு-2.5RD என்ற கொத்துக்குண்டுகளே முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது இலங்கை இராணுவத்துக்கு எதிரான வலுவான சாட்சியங்களாக அமைந்துள்ளன. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால் இந்த குண்டுகள், இறுதி மோதல்களின் போது அரசாங்கம் அறிவித்திருந்த தாக்குதல் அற்ற வலய பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலற்ற வலயத்தில் சுமார் 3 இலட்சம் பொதுமக்கள் வரை அடைக்கலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைதவிர வெடிக்காத நிலையில் இருந்த ஏ கியு-2.5RD கொத்துக்குண்டு ஒன்று சுண்டிக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த கொத்துக்குண்டுகள் மீட்ப்புச் செய்தியை ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவரே ஹார்டியனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான கொத்துக்குண்டுகளின் 42 பாகங்கள், ஆனையிறவு, பச்சிலைப்பள்ளி போன்ற இடங்களிலும் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீட்கப்பட்டதாக ஹலோ ட்ரஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இறுதி மோதல்களில் இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது: தி ஹார்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com