இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை இன்னமும் வெகு தூரத்தினை கடக்க வேண்டியுள்ளதாக பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் குழுவின் சட்ட வல்லுனர்கள் (Legal Experts from the Monitoring Accountability Panel) தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
குறிப்பாக, மனித உரிமை மீறல் விடயங்களில் பாதிக்கப்பட்ட தரப்பின் கருத்துக்களையும் உள்வாங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. அத்தோடு, வெளிநாட்டு நீதவான்கள், வழக்குரைஞர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் கூடிய நீதிப்பொறிமுறைமை உருவாக்கப்படும் என இலங்கை உறுதியளித்திருந்தது.
ஆயினும், இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் எதிர்பார்த்ததனை விடவும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கோராமலேயே அரசாங்கம் இடைக்கால நீதிப் பொறிமுறைமை முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் குழுவின் சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Responses to பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டினை இலங்கை வெகுவாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது: கண்காணிப்பாளர்கள்!