தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சுப்ரமணிய சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்ரமணிய சாமி,அரசுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அதோடு மட்டுமின்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அவர் மீதும் அவதூறாக சில தகவல்களை பரப்பி வருவதாகவும் தகவல் தெரிய வருகிறது. இந்நிலையில், ரகுராம் ராஜன் தேசப்பற்று இல்லாதவர், எனவே, அவர் நம்பகத் தன்மை இல்லாதவர் என்றும் கூறி வந்தார்.
இதையடுத்து நரேந்திர மோடி, தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை என்றும், முறையற்ற தகவல்களை கூற வேண்டாம் என்றும் சுப்ரமணிய சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுப்ரமணிய சாமி கலந்துக்கொள்ள இருந்த மும்பை, சென்னை பொதுக்கூட்டங்கள் பாஜகவினரால் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

0 Responses to தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை: பிரதமர் கண்டனம்