உலக வல்லரசு நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் எந்தவிதத்திலும் அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்துவரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரச நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்துவருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை” என்ற கருப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வெளிநாட்டுக் கொள்கையில் தற்போதைய அரசாங்கம் மிகவும் தெளிவான நேர்மையான திறந்த ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றது. எத்தகைய ஒளிவு மறைவுமின்றி எல்லா அரசாங்கங்களுடனும் உள்ள உறவுகளையும் பலப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும்.
சர்வதேச மட்டத்தில் எந்த ஒரு அரச தலைவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்பதுடன், அவர்கள் எல்லோருடையவும் பொது நோக்கம் இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்டுத்தப்டுவதைக் காண்பதாகும்.
நல்லிணக்கத்தினதும் நல்லாட்சியினதும் பெறுமதியை எமது நாட்டிலுள்ள சிலர் விளங்கிக் கொள்ளாத காரணத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எமது நாட்டின் எதிர்கால இருப்பு நல்லிணக்கத்தினதும் மற்றும் நல்லாட்சியினதும் பெறுமதியை யதார்த்தமாக்குவதன் மூலம் மட்டுமேயாகும் என்பதனை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to உலக வல்லரசுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன