Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கடற்பகுதியில் தெற்கு மீனவர்கள் எதிர்வரும் காலங்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடக்கு கடலில் மீன் பிடிப்பதற்கென தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதனை உடனடியாக நிறுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, தனது பணிப்புரையையும் மீறி தெற்கு மீனவர்கள் வடக்கு செல்ல அனுமதிப்பத்திரம் விநியோகித்த அதிகாரிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கடந்த வாரம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தீர்மானங்களை அறிவித்துள்ளார்.

0 Responses to தெற்கு மீனவர்கள் இனி வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதியில்லை: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com