Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் தினமும் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மோட்டார் பைக் ரேஸ்களை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளான மவுண்ட் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராதா கிருஷ்ணன் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இவற்றில் தினுமும் நவீன ரக பைக்குகளை வைத்துக்கொண்டு இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சாலைகளில் கண்மூடித் தனமாகப் பறந்து, மற்ற வாகன ஓட்டிகளை பயத்தில் விபத்து ஏற்படுத்தத் தூண்டுதலாக இருக்கிறார்கள். சாலை போக்குவரத்து சிக்னல்களில் இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல நிற்பதால், போலீசாரால் இவர்களை அடையாளம் காண முடிவதில்லை.

இந்நிலையில் பைக் ரேசில் ஈடுபட்ட ஒருவரின் பைக்கில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தை ஏற்படுத்திய வெற்றிமாறன் என்பவர் தமக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். நீதிபதிகள் இவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர் அதோடு சென்னையில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் பைக் ரேஸ்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சாலைகளில் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

0 Responses to சென்னையில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மோட்டார் பைக் ரேஸ்களை தடுக்க வேண்டும்; நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com