தலைவர் கலைஞருக்கு சட்டப்பேரவையில் சரியான இடம் ஒதுக்கித் தரப்படவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துபோக வசதியான இருக்கை அமைத்துத் தர வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் தாங்கள் கோரிக்கை வைத்து இருந்ததாக ஸ்டாலின் தெரிவித்தார். இன்று தலைவருக்கு ஒதுக்கி இருக்கும் இடத்தைப் பார்த்தால் அது வசதியாக இல்லை என்று ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார். அதோடு ஆளுநர் உரையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ, அதை ஆளுநர் உரையில் கூறி உள்ளார்கள். ஆனால், அதை எவ்வாறு செயல்படுத்துவோம் என்கிற கொள்கை அறிவிப்பு இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Responses to கலைஞருக்கு சட்டப்பேரவையில் சரியான இடம் ஒதுக்கித் தரப்படவில்லை: ஸ்டாலின்