Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேவைக்கு அதிகமாகவுள்ள ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், பாவனைக்கு உதவாத ஆயுதங்களை அழிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆயுதங்களை கொள்வனவு செய்த வெளிநாட்டு கம்பனிகளிடமே எஞ்சிய ஆயுதங்களை மீள ஒப்படைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதங்களின் பயன்பாடு அவசியமற்று இருப்பதனாலேயே அரசாங்கம் இத்தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.

சீத்தாவக்க பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to தேவைக்கு அதிகமாகவுள்ள ஆயுதங்களை விற்க அரசு தீர்மானம்: சாகல ரத்நாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com