Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசு கருணையோடு அணுக வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன்,நளினி உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளனர். இவர்களை கருணை அடிப்படையில், மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் உள்ளிட்ட ஏழு பெண்களின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது.

இந்த பேரணி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆரம்பித்து, கோட்டை நோக்கி செல்லும்.அங்கு முதல்வரை சந்தித்து அற்புதம்மாள் மனுக் கொடுக்க உள்ளார். இந்த பேரணியில் இயக்குனர் விக்கிரமன், ரமேஷ்,நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு உள்ளனர். தமது மனைவியுடன் பேரணியில் கலந்துக்கொண்டார் சீமான்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி முதற்கொண்டு சட்டம் என்ன சொல்கிறதோ அதற்கு சம்மதிக்கிறோம் என்று சொல்லி வரும் நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தை கருணையோடு அணுக வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்தார்.

0 Responses to ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசு கருணையோடு அணுக வேண்டும்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com