தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொய்வடைந்து வருவதைக் கண்டு சும்மா இருக்கலாமா என்று திமுக த்கலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி இன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் சென்னையில் கடந்த 4 நாட்களில் பட்டப்பகலில் நடைப்பெற்ற படுக்கொலைகள், மற்றும் செயின் பறிப்புக்கள் குறித்து சுட்டிக் காண்பித்து உள்ளார். கூலிப்படைகள் சென்னையில் கொட்டமடிக்க அவர்களின் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு, சட்டம் ஒழுங்கு தொய்வடைவதுக் கண்டு சும்மாயிருக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவலர்கள் தேர்தலின்போது ஆளும்கட்சிக்கு சாதகமாகப் பணியாற்றியதோடு தங்களது கடமை முடிந்துவிட்டது என்று சும்மா இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது என்றும் கூறியுள்ள கருணாநிதி, தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தை சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதை செயல்படுத்துவதில் இத்தனைத் தாமதம் ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளதாக கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.

0 Responses to தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொய்வடைந்து வருவதைக் கண்டு சும்மா இருக்கலாமா? கருணாநிதி கேள்வி!