தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் பிரிவினை மற்றும் சமஷ்டிக் கோரிக்கைகளைக் கைவிட்டாலே நாட்டில் அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும், இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவரும் நிலையில், இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தமிழ்க் கட்சிகள் சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டால் அரசியல் தீர்வு சாத்தியம்: சம்பிக்க ரணவக்க