Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்தில் ஐக்கிய நாடுகளுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த உடன்பாடுகளுக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உடன்படிக்கைகளில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், அவை உரியமுறையில் பின்பற்றப்படும் என்று தாம் நம்புவதாக டுஜாரிக் மேலும் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே டுஜாரிக்கின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பான் கீ மூனின் பேச்சாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com