Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தகாலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டுப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை தொடர்புபடுத்தி வலியுறுத்த அவசியமில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலை வருமான இரா.சம்பந்தன் தென்பகுதி ஊடகமான ரிவிரவிடம் தெரிவித்துள்ள நிலையில் அவர் மீதும் அவர் சார்ந்த கட்சியான தமிழரசுக்கட்சி மீதும் தமிழ் மக்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

ஜெனிவா பரிந்துரைகளுக்கேற்ப சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்றல் தொடர்பில் நாட்டில் எல்லா தரப்பினருடனும் கலந்துரையாடி அரசாங்கமே முடிவெடுக்க வேண்டுமெனவும், ஆனால் அவ்வாறு சர்வதேச நீதிபதிகள் பங்குபற்ற வேண்டுமென கூட்டமைப்பு அரசை வலியுறுத்தாது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக மேற்படி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடர்பில் ரிவிர ஊடகத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று இந்நாட்டில் பலமானதொரு நீதித்துறை நிலவுவதாகவும், தொலைபேசி மூலம் தீர்ப்பு வழங்கும் நீதிப்பொறிமுறை இன்று காணப்படவில்லை என்றும், இந்த நீதித்துறையினூடாக யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றினை மேற்கொள்ள முடியும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் எந்த விதத்திலும் (மட்டத்திலும்) வெளிநாட்டு நீதிபதிகள் சம்பந்தப்படமாட்டர்கள் என்று அரசாங்கம் உறுதியளிக்கிறது என்று கூறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பற்றி வினவியபோதே சம்பந்தன் இக்கருத் துக்களை தெரிவித்திருந்தார்.

ஜெனிவா பரிந்துரைகளை நிறைவேற்றும் விதத்தில் இந்த உள்நாட்டுப் பொறிமுறை அமைய வேண்டும். இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும். இந்த பொறிமுறையில் ஜெனிவா பரிந்துரைகளுக்கேற்ப சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்றல் தொடர்பில் நாட்டில் எல்லா தரப்பினருடனும் கலந்துரையாடி அரசே முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டுமென கூட்டமைப்பு அரசை வலியுறுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்நாட்டின் நீதித்துறை மீது தாம் நம்பிக்கை கொள்ள முடிந்திருந்தாலும் அரசியல் ரீதியாக பார்த்தால் இவ்விசாரணை நீதியான முறையில் நடைபெறும் என்று தான் நம்பவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக மேலும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அம்பலமானது தமிழரசுக்கட்சியின் போலி முகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com