பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் கனரக வாகனத்தை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் செலுத்தியதன் மூலம் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது
பிரான்ஸின் தேசிய தினத்தை முன்னிட்டு நைஸ் நகரத்தில் இடம்பெற்ற வானவேடிக்கைகளைக் காண நேற்று வியாழக்கிழமை இரவு பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தை நோக்கி வெடிமருந்துகள் பொருத்திய கனரக வாகனமொன்றை பொதுமக்களை நோக்கி ஓட்டிச்சென்றுள்ளார். கனரக வாகனத்திலிருந்து முதலில் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து, பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு விடுதிகள் மற்றும் உணவகமொன்றை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயங்கரவாத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகாரிக்கலாம் என்று பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இத்தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்: 80க்கும் அதிகமானோர் பலி, 100க்கும் அதிகமானோர் படுகாயம்!