Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீள இணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதால், சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் நாட்களின் முன்னெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட மஹிந்த அமரவீர, பிரிந்து சென்றுள்ள மஹிந்த ஆதரவு அணியை இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். இது தொடர்பில் பல சுற்று பேச்சுக்களும் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியை ஒன்றிணைக்க தான் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள மஹிந்த அமரவீர, அடுத்த கட்ட நகர்வாக புதிய யோசனை திட்டமொன்றை தயாரி்த்து வருவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதனைக் கையளித்து துரிதமாக அமுல்படுத்த இருப்பதாக கூறிய அவர், அதில் முதற் திட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றார். கட்சி மேம்பாட்டுக்காக செயற்படாத அமைப்பாளர்களை நீக்கி புதியவர்களுக்கு இடமளிக்க பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ஆதரவு அணியை சுதந்திரக் கட்சிக்குள் இணைக்கும் முயற்சி தோல்வி: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com