Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கனடா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. அதன்போதே, கனடா வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் ஸ்டீபன் டியன் கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் (Justin Trudeau) வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக கனடா பிரதமர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா பாராட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com