யாழ். பல்கலைக்கழகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to பல்கலைக்கழகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி