Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவுக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாது விட்டால், மாங்குளத்தில் அமைக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொருளாதார மையத்தினை அமைத்தல், வடக்கு மாகாண நிர்வாக கட்டமைப்பின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றை அமைத்தல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசியது. இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “வவுனியா பொருளாதா மையத்தினை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி அநுராதபுரம் மாவட்டத்தில் அதனை நிறுவும் முயற்சியில் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்க தவறும் பட்சத்தில் மாங்குளத்தில் அமைக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாவிட்டால் மாங்குளத்தில் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com