Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கி முன்னெடுக்கவுள்ள பேரணியைத் தடுப்பதற்கு அரசாங்கம் தன்னுடைய பலத்தினை முறையற்ற வகையில் பயன்படுத்தக் கூடாது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரை வரவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் பேரணி செல்லும் பாதைகளின் ஆங்காங்கே ஏனைய கட்சியினரும் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். பேரணியை குழப்பும் நோக்குடனே இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக கண்டி, மாவனல்ல, நிட்டம்புவ போன்ற இடங்களில் ஒன்று கூடுமாறு பேரணிக்கு எதிரான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்ப்பு பேரணி செல்லும் இடங்களில் தடங்கலை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் செயற்பாடுகள் மட்டுமின்றி சிவில் அமைப்புகளின் செயற்பாடுகளை கூட மேற்கொள்ள முடியாதிருந்தது. எனவே ஜனநாயக நாடொன்றில் அரசியல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது, மக்களை ஒன்று கூட்டுவதற்கு உரிமைகள் இருக்கின்றன. எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டுமென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to கூட்டு எதிரணியின் பேரணியைத் தடுக்க பலத்தை பிரயோகிக் வேண்டாம்; அரசாங்கத்திடம் கபே வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com